சொத்துத் தகராறால் விபரீதம் – செங்கல்லால் மகன் மண்டையை உடைத்த தந்தை
கரூர்: கரூர் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையே மகனைக் கல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் புகளூர் அருகேயுள்ள கோவில் நாணப்பரப்புவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது தந்தை நல்லுச்சாமி வாங்கல் அருகே உள்ள காளிபாளையத்தில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி தன் தந்தையிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால் நல்லுச்சாமி சொத்துகளை பிரித்து தர சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று எனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். நல்லுச்சாமி சொத்துகளை பிரித்து தர மறுக்கவே ராஜீவ்காந்தி புகளூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.
இந்நிலையில் ராஜீவ்காந்தியின் தந்தை நல்லுச்சாமி தனது மகன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது அருகிலிருந்த செங்கல்லை எடுத்து ராஜீவ்காந்தி மீது வீசியுள்ளார்.
இதில் ராஜீவ் காந்தியின் மண்டை உடைந்தது. உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ராஜீவ் காந்தியின் மீது செங்கல்லை எடுத்து வீசி மண்டையை உடைத்த தந்தை நல்லுச்சாமி மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications