தந்தை திடீரென தும்மியதால் நடந்த விபரீதம்! திருப்பத்தூரில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை தும்மியதால் அவரது 12 வயது மகன் அஸ்வின் தலையில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளியை அடுத்த மயிலாரம்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 12 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார்.

இந்த நிலையில் சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி, அஸ்வின், பக்கத்து வீட்டு சிறுவன் ஆகிய 3 பேரை உட்கார வைத்துக் கொண்டு சென்றார்.
அப்போது திடீரென சிலம்பரசனுக்கு தும்மல் வந்தது. அவர் தும்மிய போது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் 4 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அஸ்வினுக்கு தலையில் அடிபட்டு பயங்கர காயமடைந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
விபத்தில் சிக்கிய சிலம்பரசன், அவரது மனைவி சாந்தி, பக்கத்து வீட்டு சிறுவன் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு தும்மலால் 12 வயது சிறுவன் தனது உயிரை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது போல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம். சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (28), வேப்பிலைஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிநாத் (25). இருவரும் கடந்த நேற்றைய தினம் பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
பெல்ரம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ பைக்கில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் காயமமடைந்தனர். பின்னர் அவர்களை பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு இந்தியாவில் சாலை விபத்தில் 1.77 லட்சம் பேர் இறந்ததாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்திருந்தார்.
அதாவது ஒரு நாளைக்கு 485 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 2.31 சதவீதம் அதிகமாகும். 2024 ஆம் ஆண்டு நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,77,177 ஆகும்.
இதில் eDAR போர்ட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கு வங்கம் தொடர்பான தரவுகளும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். 4,62,825 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இங்கு 23,652 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,118 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தை பொருத்தமட்டில் 2023 ஆம் ஆண்டில் 18,347 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,449 ஆக அதிகரித்துள்ளது, மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 15,366 லிருந்து 15,715 ஆக அதிகரித்துள்ளது. கேரளா குறைந்த அளவு விபத்து சதவீதத்தை பதிவு செய்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications