கோயில் திருவிழாவில் தீ விபத்து... வான வேடிக்கை பட்டாசு வெடித்தால் விபரீதம் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் காட்பாடியில் கோயில் திருவிழாவில் கொளுத்தப்பட்ட பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

வேலூர் காட்பாடியில் கங்கை அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக, பட்டாசு அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் விழுந்ததும் தீப்பற்றிக்கொண்டது.

தீவிபத்தால் திருவிழாவுக்கு வந்திருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். உடனே பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Katpadi, Gangai amman koil festival fire accident occurred and fire department people stopped the fire in time and saved all.
Please Wait while comments are loading...