திருப்பூர் சாயப்பட்டறையில் தீ... பல லட்சம் துணிகள் தீக்கிரை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகில் சாயப்பட்டறை ஒன்று எரிந்ததில் அங்கு இருந்த பல லட்சம் மதிப்புள்ள துணிகளும் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே உள்ளது இடும்பன்பளையம். இங்கு ஆறுமுகம் என்பவர் சாயப்பட்டறை அமைத்து நடத்தி வருகிறார். கூரை வேய்ந்த குடோனில் பல லட்சம் மதிப்புள்ள துணிகளாஇ வைத்துள்ளார்.

 Fire accident in Tiruppur Idummpanpalayam dying unit

அங்கு எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. அதில் அனைத்து துணிகளும் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

குடோனில் கட்டப்படிருந்த ஆடு ஒன்று தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீப்பற்றியதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Tiruppur in Idumppanpalayam, dying unit got fired and cloths in that godown fired completely.
Please Wait while comments are loading...