தமிழகத்தை உலுக்கிய பயங்கர தீவிபத்துகள்- அன்று மதுரையில்... இன்று தேனியில் #TheniForestFire

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி காட்டுத்தீயில் இருந்து 27 பேர் மீட்பு

  சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தேனி குரங்கணி வனப் பகுதிகளில் நடைபெற்ற தீவிபத்துகள் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

  தமிழகத்தில் இந்த ஆண்டு தீவிபத்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து ஆகும்.

  உலகின் பிரசித்தி பெற்ற கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இங்கு கடந்த மாதம் ஒரு கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.

  இதில் யாருக்கும் உயிரிழப்பு இல்லை எனில், கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதால் மக்கள் வேதனை அடைந்தனர்.

  புறாக்கள் மடிந்தன

  புறாக்கள் மடிந்தன

  ரிஷிக்களின் அவதாரமான புறாக்கள், தீவிபத்து சுவாலையில் எரிந்து நாசமாகின. இது நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கருத்து தெரிவித்தனர். இது மக்களை மேலும் பாதித்தது.

  ஸ்தல விருட்ஷம்

  ஸ்தல விருட்ஷம்

  திருவள்ளூர் வடாரண்யேஸ்வரர் கோயிலில் சுவாமியின் ஸ்தல விருட்ஷமே எரிந்தது. இது மக்களை மேலும் பாதித்தது. மேலும் மதுரை தீவிபத்தின் போதே ஜோதிட ரீதியில் சில இடங்களில் தீவிபத்து நடைபெறும் என்று கூறியிருந்ததால் மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியது.

  பெரும் விபத்து

  பெரும் விபத்து

  தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் சிக்கினர். இதில் 8 முதல் 10 பேர் வரை இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் 17 பேருக்கு 40 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக சொல்லப்படும் தகவல் மேலும் பீதியை ஏற்படுத்துகிறது.

  மக்கள் வேதனை

  மக்கள் வேதனை

  மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து, குரங்கணி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீவிபத்து ஆகியவை தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களாகும். மதுரையில் திருஷ்டி சுத்தி போட்ட கற்பூரத்தால் தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் குரங்கணி பகுதியில் கோடைகாலத்தில் அவ்வபோது காட்டுத் தீ ஏற்படும். எனவே கோடை காலத்தில் வனப்பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fire accidents happened recently shook TN. Madurai Meenakshi Amman temple fire shakes the state very much. After this Theni forest fire incident which leads 7 death.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற