சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ.. ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

Fire breaks out at Income Tax Office in chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் 4வது தளத்தில் சினிமாத் துறையினரின் கோப்புகள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மிகவும் பழமையான கட்டடம் என்பதால் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தால் ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A fire in the Income Tax department office on the Nungambakkam, chennai.
Please Wait while comments are loading...