ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரணி: ஆரணியில் உள்ள கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு தவறிவிட்டதாக மக்கள் காலிக்குடங்களுடன் மறியல், போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்றாடம் காணமுடிகிறது.

Flood in Arni Kamandala Naganathi River

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆரணியிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவதி அடைந்து வரும் மக்கள், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to heavy rain, Water bodies in TN are getting more water flow. Like wise, Arni's Kamandala Naganathi River also meets flood. People are very happy.
Please Wait while comments are loading...