For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் வெள்ளப்பெருக்கு.. கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்!

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரியில் வெள்ளப்பெருக்கு- வீடியோ

    சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடக அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையி்ன் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து தற்போது 45.05 அடியாக உள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்வரத்து அதிகரிப்பு

    அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாகவும், திறப்பு 500 கன அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் தற்போதயை நீர் இருப்பு நிலவரம் 14.83 டிஎம்சியாக உள்ளது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு

    காவிரியில் வெள்ளப்பெருக்கு

    நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

     சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எமனூர், ஓட்டனூர், நாகமரை பகுதிகளுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தவிப்பு

    மாணவர்கள் தவிப்பு

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தருமபுரி மாவட்டம் கொளத்தூர், ஒட்டனூர், ஏரியூர் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    English summary
    Flood in Cauvery river at Salem district. Boat transportation has been stopped due to flood. Cauvery river bank people affceted due to this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X