1.42 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. தமிழக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த இரண்டு வாராமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.

தற்போது கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மொத்தமாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மீண்டும் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி 120.85 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்ல கூடாது என்று கூறியுள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications