For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் 9 கிராமங்கள்!

சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் 9 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் 9 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரால் திருச்சி, சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.

Flood water enters into 9 villages of the Chidambaram Kollidam bank

இதனால் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் மேல்திட்டை உள்ளிட்ட 9 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் அதனை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே 13 ஆண்டுகளுக்கு பிறகு கரைபுரளும் வெள்ளத்தை காண ஏராளமான மக்கள் கொள்ளிடம் பாலம் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

English summary
Flood in Kollidam dam. Flood water enters into 9 villages of the Chidambaram Kollidam bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X