குரங்கணியில் மட்டுமில்லை.. நியூட்ரினோ திட்டம் வரவிருந்த மலை தொடரிலும் காட்டு தீ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மத்திய அரசின் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் பகுதிகளிலும் தீ விபத்து- வீடியோ

  தேனி: தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் மலைத்தொடர் பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக அங்கு காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது.

  தற்போது குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

  இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

  எந்த பகுதி

  எந்த பகுதி

  நியூட்ரினோ திட்டம் தேவராம் பொட்டிபுரம் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ததற்கு நிறைய காரணம் கூறப்பட்டது. இந்த மலையை குடைந்து, அதில் சுரங்க பாதை அமைத்து ஆராய்ச்சி செய்யப்பட இருக்கிறது.

  எவ்வளவு தூரம்

  எவ்வளவு தூரம்

  இந்த பகுதி தற்போது காட்டு தீ ஏற்பட்டு இருக்கும் குரங்கணி பகுதியில் இருந்து 30 கிமீ தூரத்தில் இருக்கிறது. இடையில் நிறைய காட்டுப்பகுதி இருக்கிறது. இந்த மலை வளம்தான் ஆராய்ச்சிக்கு முக்கியம் ஆகும்.

  இதுவும் மோசம்

  இதுவும் மோசம்

  ஆனால் இந்த பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 30 கிமீ காட்டுப்பகுதியில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது. நியூட்ரினோ திட்டம் அமைக்க பொட்டிபுரத்தில் குறிக்கப்பட்ட இடத்தில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

  ஒருவாரம்

  ஒருவாரம்

  இந்த பொட்டிபுரத்தில் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை கஷ்டப்பட்டு வருகிறது. 8 நாட்களாக கஷ்டப்பட்டு தீயை அணைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. நியூட்ரினோ திட்டம் கொண்டு வரும் போது என்ன மாதிரியான பாதுகாப்பு பணிகள் செய்யப்படும் என்று கூறப்படவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Wild fire strikes in Theni kills 8 girl student. 25 more college girl rescued from inside the fire area. Temporary helipad construction goes on for rescue operation in Theni Forest Fire.Forest Fire is continuously affecting the Theni Forest area for past one week.Forest Fire in Theni is just few Km away from Neutrino Project place.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற