கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் காலமானார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஜான் ஜேக்கப் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

2004 மற்றும் 2011ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான் ஜேக்கப். இவருக்கு வயது 65.

 Former Killiyur MLA John Jacob passed away

ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜாக் ஜேக்கப், வாசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய போது காங்கிரஸில் இருந்து விலகி அதில் இணைந்தார். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜான் ஜேக்கப் இன்று காலமானார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Killiyur MLA John Jacob passed away. John Jacob was elected as MLA in 2006 and 2011 Elections. He was elected on behalf on Congress Party and Later he joined in GK Vasan TMC.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற