2ஜி வழக்கில் விடுதலையான ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ

  சென்னை: 2ஜி வழக்கில் விடுதலையான ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

  முந்தைய காங்கிரஸ் தலைமையிலா ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

  இதன் காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மெகா ஊழல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கனிமொழி, ராசா விடுதலை

  கனிமொழி, ராசா விடுதலை

  டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இதுதொடர்பான வழக்கில் கனிமொழி எம்பி, ஆ ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் கடந்த 21ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

  நான் கூறியது நினைவிருக்கலாம்

  நான் கூறியது நினைவிருக்கலாம்

  இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக ஆ ராசா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் தவறு ஏதும் செய்யவில்லை என பல முறை கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் உங்களால் அப்போது வெளிப்படையாக எனக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் போனதையும் நான் அறிவேன் என்றும் கூறியிருந்தார்.

  ஆ ராசாவுக்கு கடிதம்

  ஆ ராசாவுக்கு கடிதம்

  மேலும் தற்போது தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் ராசா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் குத்திக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஆ.ராசாவின் கடிதத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

  விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது

  விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது

  அதில் 2ஜி வழக்கில் உண்மை வென்றது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

  புத்தாண்டு வாழ்த்து

  2ஜி வழக்கால் ஆராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர் என்றும். ஆ ராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former prime minister Manmohan singh writes letter to A Raja. Manmohan singh says that he is happy for verdict on 2G case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற