ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடிய விவகாரம்... தமாகா முற்றுகை போராட்டம்!
சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை : சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடியதற்கு கண்டனம் தெரிவித்து ஐஐடி முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தொழில்நுட்ப மைய அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நேற்று சென்னை அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக 'மஹா கணபதி' என்ற சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமாகா இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்கு ஐஐடி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஐஐடி முன்பு மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியானதையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் மாணவர்களும், பேராசிரியர்களும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications