தவறாக பயன்படுத்திட்டாங்கன்னு அப்பாவை திட்டினாலும்.. ரஜினிக்கு ‘வெல்கம்’ சொல்றாரு வாசன்-பின்னணி என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிறைவு நாளான இன்று அவர் ரசிகர்களிடையே உரையாற்றிய போது, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்களுக்கு சூசக தகவலை தெரிவித்தார். ரஜினியின் இந்த முடிவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று ''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் மக்கள் மன நிலையை நன்கு புரிந்தவர். எனவே அவர் சரியான முடிவை எடுப்பார்'' என்று ஜி.கே. வாசன் வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.

விபத்து

விபத்து

ரசிகர்களுடனான சந்திப்பின் முடிவில் அரசியலுக்கு வருவதை சூசகமாக அறிவித்த ரஜினி, முதல் நாள் உரையில், தாம் அரசியல் பேச நேரிட்டது ஒரு விபத்து என்று குறிப்பிட்டதோடு, தன்னை தவறாக அரசியலில் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கூறினார்.

தெரியாமலேயே…

தெரியாமலேயே…

1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி வைத்த போது, அந்தக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பேசியவர் ரஜினிகாந்த். அதைத்தான் ரஜினி விபத்து என்று சொல்கிறார் என்பது தெரியாமலேயே வாசன், ரஜினிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

அண்ணாமலை சைக்கிள் போஸ்டர்

அண்ணாமலை சைக்கிள் போஸ்டர்

அப்போது ரஜினிகாந்த் கொடுத்த ஆதரவை பயன்படுத்திக் கொண்ட ஜி.கே. மூப்பனார், தமாகவிற்கு சின்னமாக ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தை ரஜினியோடு தொடர்புபடுத்தி பல வண்ண போஸ்டர்களை அடித்து ஒட்டினார். குறிப்பாக அண்ணாமலை படத்தில் சைக்கிளிலோடு ரஜினி வலம் வரும் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டன.

தைரியம்

தைரியம்

அன்று இதற்கெல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், இத்தனை ஆண்டுகள் கழித்து என்னை தவறாக அப்போது பயன்படுத்திவிட்டார்கள் என்றும், அது ஒரு விபத்து என்றும் இப்போது பேசிகிறார். அதுவும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமில்லாமல் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் இப்படி பேசி இருக்கிறார்.

அப்பா பாவம்

அப்பா பாவம்

திமுக தலைவர் கருணாநிதி இல்லை என்பது இருக்கட்டும். அரசியலில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஏன் இதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரஜினிக்கு வாழ்த்தும் சொல்லி இருக்கிறார். தன் தந்தையை என்ன சொன்னாலும் பரவாயில்லை வாங்க மிஸ்டர் ரஜினி என்பதற்கு பின்னணி என்ன என்பதுதான் தெரியவில்லை. ஒருவேலை ஓபிஎஸ், ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்து பேசி இருப்பதால் அதையே இவரும் ஃபாலோ பண்ணி சொல்லிட்டாரோ என்னவோ...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TMC leader G.K. Vassan has welcomed Rajinikanth’s political entry.
Please Wait while comments are loading...