என்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஜய் டிவியில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் புகழடைந்தவர்.

கமல் இவரின் குடும்ப நண்பர் என்ற பேச்சு உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பல அடாவடிகளை செய்ததாக நிகழ்ச்சி ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், காயத்ரிக்கு, கமல் ஆதரவு அளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரச் செய்வதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.

நெட்டிசன்கள் கோபம்

நெட்டிசன்கள் கோபம்

காயத்ரி செய்த பல தவறுகளை கமல் லேசாக கடந்து சென்றதாக சமூக வலைத்தளங்களில் பலர் குமுறினர். ஆனால், கமல் கருத்து ஒன்று தன்னை நோகடித்துவிட்டதாக காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.

கமலுக்கு பதிலடி?

தனது டிவிட்டில் "நான் காயமடைந்துள்ளேன். நான் இந்துதான், ஆனால் தீவிரவாவதி இல்லை" என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். இந்துக்களிலும் தீவிரவாதிகள் உருவாகிவிட்டதாக கமல் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். இதற்கு அகில இந்திய அளவிலும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகரும் மனவருத்தமாம்

எஸ்.வி.சேகரும் மனவருத்தமாம்

ஏற்கனவே இதே கருத்துக்காக கமலுடன் எஸ்.வி.சேகரும் மன வருத்தத்தில் உள்ளார். அவரது டிவிட்டுகள் அதை எடுத்துக்காட்டுகின்றன. எஸ்.வி.சேகரும், கமலும் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள்.

கமல் பெயரை கூறவில்லை

அதேநேரம் காயத்ரி, கமல் பெயரை குறிப்பிடாமல் இதை டிவிட் செய்துள்ளார். இது இந்த நேரத்தில் கமலுக்கான பதிலடிதான் என்று நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். எனவே இந்த டிவிட்டும் வைரலாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
"I'm hurt. Im a Hindu and I'm not a terrorist" says Gayathri Raghuram.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X