சேரி பிஹேவியரை நியாயப்படுத்த பெண் என்ற முகமூடியை பயன்படுத்துவது நியாயமா கிரிஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேரி பிஹேவியர் என குறிப்பிட்ட காயத்ரியை நியாயப்படுத்த பெண் என்ற முகமூடியை அவரது தாயார் கிரிஜா ரகுராம் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களின் கண்டனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரது செயலை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜூலியை தேடி தேடி வம்பிழுத்தது நிகழ்ச்சியை பார்ப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் அந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

 சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம் அடித்த ஒரு கமென்ட் நிகழ்ச்சியை தடை செய்யவும், கமலை கைது செய்யவு்ம கோரும் அளவுக்கு சென்றுவிட்டது. நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என்று காயத்ரி விமர்சித்தார்.

 வலுக்கும் எதிர்க்கும்

வலுக்கும் எதிர்க்கும்

இதுதான் தாமதம் தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு கேவலப்படுத்துவதா என்றும் காயத்ரியை வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நாளுக்கு நாள் கோரிக்கை வலுத்து வருகிறது. நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மனு அளித்ததை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்.

 கண்டிக்கவில்லை

கண்டிக்கவில்லை

சேரி பிஹேவியர் என்பது காயத்ரி வெளியிட்ட கருத்து அதற்கெல்லாம் தாம் பொறுப்பாக முடியாது என்று பொறுப்பற்ற பதிலை தெரிவித்தார். காயத்ரிக்கு எதிர்ப்பு வலுப்பதை அறிந்த அவரது தாய் கிரிஜா ரகுராம், சேரி பிஹேவியர் என்று என் மகள் கூறியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்.

 பெண் என்பதாலா?

பெண் என்பதாலா?

மேலும் அவர் பெண் என்பதாலும், பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரை கண்டபடி விமர்சிக்காதீர்கள். கேவலப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். சேரி பிஹேவியர் என்று தன் மகள் கூறியதற்கு மன்னிப்பு கேட்டாலும் அதை பெண் என்ற முகமூடியை கொண்டு கிரிஜா நியாயப்படுத்துவது சரியா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 ஜூலியும் பெண்தானே

ஜூலியும் பெண்தானே

ஜூலியின் ஓவர் நடிப்பாலும், அவர் குறித்து வெளியான வீடியோவினாலும் அவர் மீது மக்களுக்கு அதிருப்தியிருந்தாலும், ஆரம்பத்தில் அவரை காயத்ரியும், ஆர்த்தியும் சுற்றி சுற்றி வம்பிழுத்தபோது அவர் மட்டும் பெண்ணில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக காதல் வயப்பட்டால் அதை தன்னுடன் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பு. அதைத்தான் ஆரார் மீதான காதலை ஜூலி, காயத்ரியிடம் தெரிவித்தார்.

 நான் மாமா இல்லை

நான் மாமா இல்லை

தன்னிடம் சொன்ன விஷயத்தை நமீதாவிடம் கூறியதே தவறு. அதிலும் காயத்ரியோ நான் அக்காதானே, மாமா அல்ல என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார். இதுபோல் தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டு வரும் தன் மகளை காப்பாற்ற பெண் என்ற முகமூடியை அவர் பயன்படுத்தலாமா. நிகழ்ச்சியில் எச்சை என்று பேசினார். ஒரு பிரபலத்துக்கு இதெல்லாம் அழகா. பெண்ணை அடக்காமல் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிறாரே இவரை என்ன சொல்வது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People condemns Girija Raghuram to protect her daughter Gayathri in the name of woman on her controversial comment.
Please Wait while comments are loading...