”படார் படார்னு உடையதாம்... நொறுங்குதாம்... இடம் உங்களுக்கு தெரிஞ்சதுதான்” - இது 58வது முறை!
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான விமான நிலையத்தின் கண்ணாடிக்கதவுகள் 58வது முறையாக உடைந்து விழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் கழன்று விழுந்து நொறுங்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 57 முறை கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 57ஆவது முறையாக விமான நிலையத்தின் கண்ணாடி உடைந்து விழுந்தது. வெளிநாட்டு வருகை முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்குச் செல்லும் பாதையில் கிட்டதட்ட 3 அடி அகலம், 4 அடி உயரமுள்ள கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது.
இந்நிலையில் இன்று உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் சோதனை அறையில் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் அதிகாரிகளும், பயணிகளும் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications