எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ் தெரியும்.. அங்க என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாற்பது நிமிட தியானம் இருந்தது தமிழக அரசியல் களத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. சசிகலாவிற்கு எதிராக அவர் வைத்து வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதாவின் ஆன்மா எம்எல்ஏக்களை உசுப்பும் மனச்சாட்சிப்படி எனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஓபிஎஸ். ஆனால் சசிகலாவோ நானே முதல்வராக அமருவேன் என்று கூறி வருகிறார். இதற்காக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் 131 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர் என்று கூறினார் செங்கோட்டையன்.

கூட்டம் முடிந்த கையோடு சொகுசு பேருந்தில் எம்எல்ஏக்களை அழைத்து சென்று கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் சிறை வைக்க கொண்டு சென்றனர். அப்படியும் சிலர் போகிற வழியிலேயே தப்பி ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு கூறியுள்ளனர்.

தீவுக்குள் ரிசார்ட்ஸ்

தீவுக்குள் ரிசார்ட்ஸ்

சொகுசு பேருந்தில் போன எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்குக் கடற்கரை சாலையில் கூவாத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ்சில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்ஸ் உள்ள பகுதியே தீவு போல காணப்படுகிறது. கடலுக்குள் ரம்மியமாக காணப்படும் இந்த ரிசார்ட்ஸ்சில் 3 விதமான அறைகள் உள்ளன.

மூன்று வித ரூம்கள்

மூன்று வித ரூம்கள்

500 சதுர அடிகள் கொண்ட பே வியூ ரூம், 500 சதுர அடிகள் கொண்ட டிரான்க்யுல் ரூம், 650 சதுரஅடிகள் கொண்ட பாரடைஸ் சூட் ரூம்கள் உள்ளன. அனைத்து விதமான வசதிகளும் காணப்படுகின்றன. படகில் போகலாம், பொழுது போக்கு அம்சங்கள் பல உள்ளன.

என்னென்ன வசதிகள்

என்னென்ன வசதிகள்

மசாஜ் சென்டர், டிரக்கிங், ஜிம் போன்ற அனைத்து சிறப்பம்சங்களும் கொண்டதாக இருக்கிறது கோல்டன் பே ரிசார்ட்ஸ். இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த ரிசார்ட்ஸ் ரூம்களில் ஒரு நாள் வாடகை பல ரகங்களில் உள்ளன.

வாடகை எவ்வளவு

வாடகை எவ்வளவு

கடலுக்கு ரம்மியமாக பல வசதிகளுடன் உள்ள இந்த ரிசார்ட்ஸ்சில் பணக்காரர்களும், சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து தங்கி செல்கின்றனர்.
டிரான்க்யுல் ரூம் ஒருநாள் வாடகை ரூ.5500, பே வியூ ரூம்கள் ஒருநாள் வாடகை ரூ.6.600, முதல்தரமான பாரடைஸ் சூட் ரூம் ஒரு நாள் வாடகை ரூ.9900. நம் எம்எல்ஏக்கள் பாரடைஸ் சூட் ரூமில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Golden Bay Resorts is the perfect and smart retreat for leisure to travelers looking beyond the monotony of just another hotel. Golden Bay resorts Tranquil rooms spread across 500 Sq.ft area with sitting facility balcony. Paradise Suit which spread across 650 Sq.ft. with sitting facility balcony with amazing view of the Sea back water
Please Wait while comments are loading...