Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எடு வண்டிய".. பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு.. மொத்த பஸ்ஸையும் விட போறாங்களாம்.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசு ஏசி பஸ்களை, பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்களாம்.. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள அரசு போக்குவரத்து கழகம், முக்கிய தகவலையும் பகிர்ந்துகொண்டுள்ளது.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.

Good news about government ac buses and whats the special announcement

ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

விரைவு பஸ்கள்: அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையை சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. அதாவது, 5 முறை பயணம் செய்வதற்கு, எந்தவிதமான சலுகையும் கிடையாது... அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமாம். ஆனால், ஒரே இடத்திற்கு, இந்த பயணம் அமைய வேண்டும்.

Good news about government ac buses and whats the special announcement

உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை மட்டுமே வர வேண்டும்... பயணம் செய்யும் மாறாமல், ஒரே இடமாக இருந்தால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.. இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.. அதேபோல, எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது...

அதிரடி சலுகை: அதற்கேற்றவாறுதான் சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு வருகிறதாம்.. இந்த சலுகையானது, ஏசி பஸ் உட்பட எல்லா விரைவு பஸ்களுக்கும் பொருந்தும் என்றும், கோடை காலம் துவங்கிவிட்டதால், இப்போதே இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணியும் துரிதமாக நடந்து வரும்நிலையில், அடுத்த ஒருசில நாட்களில் முடிவடையும் என்கிறார்கள். இதனிடையே இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

ஏசி பஸ்கள்: அரசு 'ஏசி' பஸ்களுக்கு, பயணியரிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறதாம்.. இதை பூரித்து சொல்கிறார்கள் போக்குவரத்து அதிகாரிகள்.. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், இருக்கை, படுக்கை, கழிப்பறை வசதிகளுடன், 729 ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை, தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கும், அதேபோல, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

Good news about government ac buses and whats the special announcement

தனியார் பஸ்களின் பயண கட்டணத்தை விட, அரசு ஏசி பஸ்களின் கட்டணம் மிகவும் குறைவு. இதனால் பயணிகள்.. அதிகளவில் அரசு ஏசி பஸ்களுக்கு முன்பதிவு செய்கிறார்களாம்.. அதுவும் வார நாட்களில், சராசரியாக 25 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தினமும் பயணங்களை மேற்கொள்கிறார்கள்.. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேர்மறை கருத்துக்கள்: "இப்போது, அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்படுகின்றன. மற்ற நாட்களிலும், பயணியரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், வரும் ஜூன் வரை, அனைத்து ஏசி பஸ்களையும் இயக்க உத்தரவிட்டு உள்ளோம்.. அரசு பஸ்களில் பயணிப்போர், பயண அனுபவம் குறித்த நேர்மறையான கருத்துகளை பதிவிடுகிறார்கள்.. இதனால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.. பஸ்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால், பஸ்சின் பதிவெண்ணுடன், 94430 14448 என்ற 'செல்போன் நம்பரில் புகார் அளித்தால், உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+