பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: இருவருக்கு குண்டர் சட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்குத் தொடர்பாக ஒரு பெண் உட்பட இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை போலீசார் கைதுசெய்தனர்.
திட்டக்குடியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் கடந்த 8.6.2014 முதல் காணவில்லை என பெற்றோர்கள் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இரு சிறுமிகளையும் ஆகஸ்டு 5ஆம் தேதி கண்டுபிடித்தனர்.
பாதிரியார் பலாத்காரம்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாதிரியார் அருள்தாஸ்,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
பாலியல் தொழில்
இதேபோல் திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி, மேகலா, நெல்லிக்குப்பம் ராதா,கோலியனூர் கூட்டுரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் மாணவிகளை விடுதியில் தங்கவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
இதையடுத்து முதல்கட்டமாக பாதிரியார் அருள்தாஸ், தனலட்சுமி,கலா என்ற மேகலா, ஜெபினா, வடலூர் சதீஷ், தமிழ்செல்வி,சர்மிளா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு கவிதா, மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா, கோலியனூர் பாத்திமா,இவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, அமுதா, மற்றொரு அன்பு,பாலு என்ற பாலசுப்பிரமணியன், சதீஷ் மற்றும் ஓட்டுநர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்தனர்.
வாகனம் பறிமுதல்
மேலும் பாலியல் குற்றம் செய்த திட்டக்குடியை சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன், விக்னேஷ், ஆனந்தராஜ், ஆகியோரும் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து ஒரு கார், 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2 பேர் மீது குண்டர் சட்டம்
இந்நிலையில் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக விருத்தாசலத்தைச் சேர்ந்த கலா என்ற மேகலா மற்றும் வடலூரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 21 பேரில் இருவர் மட்டும் முதற்கட்டமாக குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications