அப்ப ரோடு எதுக்கு சாமி.. சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை ஒட்டிச்சென்ற டிரைவர்..பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: சாலையில் செல்லாமல் சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை டிரைவர் ஒட்டிச்சென்றதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    அப்ப ரோடு எதுக்கு சாமி.. சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை ஒட்டிச்சென்ற டிரைவர்..பகீர் வீடியோ

    பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு நகர பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    சென்டர் மீடியனில் சென்ற பேருந்து

    சென்டர் மீடியனில் சென்ற பேருந்து

    பொள்ளாச்சி - ஜமீன் ஊத்துக்குளி சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சென்டர் மீடியனில் ஏறியது. எனினும் பேருந்தை ஒட்டிச்சென்ற டிரைவர் அதனை பின்னோக்கி இயக்கி நார்மலான சாலைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து சென்டர் மீடியனிலேயே பேருந்தை இயக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பயணிகள் அச்சம்

    பயணிகள் அச்சம்

    சுமார் 1 கி.மீ தூரம் அந்த பேருந்து சென்டர் மீடியனிலேயே சென்றது. இதனால் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள செடிகள் சேதமடைந்தது. அரசு பேருந்து வித்தியாசமாக செல்வதை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தில் இருந்த பயணிகளும் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் பயணித்தனர்.

    பகீர் வீடியோ

    பகீர் வீடியோ

    1 கி.மீ தூரத்துக்கு பிறகே அந்த பேருந்து வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைக்கு வந்தது. பேருந்து சென்டர் மீடியனில் சென்றதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுபோன்று கவனக்குறைவால் பேருந்தை ஓட்டும் டிரைவர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.

    பழுதடைந்த பேருந்துகள்

    பழுதடைந்த பேருந்துகள்

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தொழில் நிமித்தமாகவும், படிப்புக்காகவும் அரசு டவுண் பஸ்களில் பொள்ளாச்சி வந்து செல்கின்றனர் ஆனால் இந்த டவுன் பஸ்கள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வருவதாக கூறப்படுகிறது. சென்டர் மீடியனில் ஓடிய பேருந்தும் மிக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இதனால்தான் அதனை உடன்டியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+