போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு மெத்தனமாக நடக்கிறது.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  அரசு மெத்தனமாக இருக்கிறது -செந்தில்பாலாஜி- வீடியோ

  சென்னை: போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு மெத்தனமாக நடப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

  தமிழகம் முழுவதும் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

  Government is not serious in the Transport employees issues: Senthil balaji

  இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். அரசு கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

  இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

  மேலும் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு மெத்தனமாக நடக்கிறது என்றும் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார். முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran's supporter and Former minster Senthil balaji says that Government is not serious in the Transport employees issues. He insisted that the CM should talk with the transport workers.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற