இசைஞானி இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து!
பத்மவிருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பத்மவிருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்ம விருதுகளை அறிவித்தது. அதன்படி இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகள், ஒன்பது பத்மபூஷண் விருதுகள், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்தது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர். இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதும், தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு பத்மபூஷண் விருதும், மதுரையைச் சேர்ந்த ராஜகோபால் வாசுதேவன், நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள், கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பத்ம விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா உட்பட 6 பேருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நாட்டு மக்களுக்கு செய்த சேவைக்காக அவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications