78 வயதாகிறது... கொள்ளு பேரன் உண்டு... உங்கள் வாயால் அப்படி கூறாதீர்... பிரஸ்மீட்டில் ஆளுநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேராசிரியை ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு

  சென்னை: எனக்கு 78 வயதாகிறது, என்னை நிர்மலா தேவி விவகாரத்தில் இணைத்து பேசாதீர் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

  பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆடியோவில் ஆளுநர் என்ற பதவியும் இடம்பெற்றுள்ளது.

  Governor Banwarilal Purohit says that i am 78 years old

  இந்நிலையில் சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிர்மலா தேவி தனது ஆடியோவில் ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளாரே என்ற கேள்விக்கு ஆளுநர் சற்று கோபமடைந்தார்.

  பின்னர் அவர் கூறுகையில் பேராசிரியை நிர்மலா தேவியின் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனது பாதுகாவலர்களை மீறி ஒரு பறவையும் உள்ளே வர முடியாது.

  அந்த ஆடியோவில் ஆளுநர் தாத்தா இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனக்கு பேரன், பேத்தி மட்டுமல்ல கொள்ளுபேரனே உள்ளான். எனக்கு 78 வயதாகிறது. உங்கள் வாயால் அப்படி கூறாதீர் என்றார் ஆளுநர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Governor Banwarilal Purohit says that i am 78 years old, how can u involve my name in the Nirmala Devi issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற