For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் திருநாள் தை பொங்கல்... ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதன தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். பலர் பொங்கல் பண்டிகையாகவும் சிலர் புத்தாண்டின் தொடக்க நாளாகவும் கொண்டாடுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அரசியல் கட்சியி தலைவர்கள் பலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். விவசாய அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இதுவென்று கூறியுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மகிழ்ச்சி தங்கட்டும்

மகிழ்ச்சி தங்கட்டும்

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் பொங்கட்டும், தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி தங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையின்போது சாதி வேறுபாடுகள் நீங்கி, சமத்துவமும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சோதனைகள் நம்மை முற்றுகையிட்டாலும் பொங்கல் நாளில் நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக ஆயிரமாயிரம் ஆண்டாக கொண்டாடி மகிழும் திருநாள் தைப்பொங்கல் ஆகும் என்று வைகோ தெரிவித்துள்ளார். விவசாயிகள் மறுவாழ்வுக்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நன்நாளில் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும்

இந்நன்நாளில் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் பாராளுமன்றம் நடைபெறாத சூழலில் அவசரச் சட்டம் கொண்டு வந்து உச்சநீதி மன்ற அனுமதியைப் பெற்று ஜல்லிக்கட்டு இவ்வாண்டு நடைபெற மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையேல் மக்களே ஜல்லிக்கட்டை நடத்திட முயற்சிக்கும் சூழல் இப்போது நிலவுகிறது. எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

உரிமைகளை மீட்க உறுதியேற்போம்

உரிமைகளை மீட்க உறுதியேற்போம்

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தமிழக மக்களுக்கு பொங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த முடியாத ஒரு நெருக்கடியை திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளனர் நம் இன எதிரிகள். ஜல்லிக்கட்டு மீதான தடையை உடைக்கும் வகையில் தன்னெழுச்சியான போராட்டங்களை நமது இளையோர் சமூகம் முன்னெடுத்து வருகிறது. இத்தகைய அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக தமிழகம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சூழலில் பொங்கல் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். தமிழர் திருநாளான இந்த நன்னாளில் விவசாயிகளின் துயரங்கள் தீரவும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடராத வகையிலும் தமிழினத்தின் உரிமைகளை மீட்கவும் உறுதியேற்போம் என வேல்முருகன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தமிழர்களுக்கு தை திருநாள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

English summary
Pongal festival is going to celebrate tomorrow across Tamilnadu. For this festival including governor, many of politicians greetings for Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X