ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்.. அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த அறிக்கையில் தமிழக நிலவரம் குறித்து விரிவாக விளக்கியுள்ளாரம் ஆளுநர். இது தவிர மேலும் ஒரு விரிவான அறிக்கையையும் ராஜ்நாத் சிங்குக்கு விரைவில் ஆளுநர் அனுப்பவுள்ளாராம்.

Governor sends report to President on TN political situation

சசிகலாவை அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் தங்களது சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மிக நீண்ட தாமதத்திற்குப் பின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் இன்று சென்னை வந்தார். அவரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அவரைத் தொடர்ந்து சசிகலாவும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை விளக்கினார் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா தான் ஆட்சியமைக்க உரிமை கோரி மனு அளித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் அவர் அளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் தற்போது குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆளுநர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருடனான சந்திப்பு, அவர்களது கோரிக்கை உள்ளிட்டவை குறித்து விவரித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதவிர மத்திய உள்துறை அமைச்சருக்கு இன்னொரு விரிவான அறிக்கையயும் ஆளுநர் அனுப்பவுள்ளார். சட்டம் மற்றும் அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு அறிக்கை அனுப்பப்படும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநர் அறிக்கை அனுப்பியிருப்பதைப் பார்த்தால் தமிழக அரசுக்கு சிக்கல் வருகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது தற்போதுள்ள குழப்பமான நிலையைக் காரணம் காட்டி அதிமுக அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உள்துறை அமைச்சருக்கு இன்னொரு அறிக்கை அனுப்பப் போவதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளதால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu incharge Governor Vidyasagara Rao has sent a report to President, PMO and Home ministery on the TN political situation.
Please Wait while comments are loading...