இவர் சொன்னால் மழை பெய்யும்.. மக்கள் அன்பை பெற்ற வெதர்மேனுக்கு அன்புமணி பாராட்டு
மழையை கணித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வரும் வெதர்மேன் பிரதீப் ஜானை அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: மழை பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வரும் வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது மழை ரசிகர்கள் கதாநாயகன் ஆகிவிட்டார். அவரது பதிவை பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கம் இப்பொழுது பரபரப்பாகிவிட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு வெதர்மேன் என்ற பக்கத்தை ஃபேஸ்புக்கில் தொடங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மழை மனிதர் பிரதீப் ஜான்
2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் பொழுது, வானிலை நிலையத்தின் தகவல்களைக் காட்டிலும் இவர் கொடுத்த தகவல்கள் துல்லியமாக இருந்தன. பின்னர் வர்தா புயலின் பொழுதும் இவர் கொடுத்த 'அலெர்ட்'கள் மக்களுக்கு உதவின.
நன்றி சொன்ன வெதர்மேன்
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. தனது பதிவை வாசிப்பவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

பாராட்டும் மக்கள்
இன்று சென்னையில் மழை வரும், பகலிலும் விட்டு விட்டு மழை பெய்யும் என்று இவர் ஸ்டேட்டஸ் போட்ட அரை மணிநேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் லைக் போட்டு கமெண்ட் போடுகின்றனர். இது நீண்ட மழை நாள் என்று அவர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் பேர் லைக் போட்டுள்ளனர்.
நீண்ட மழைநாள்
இன்று காலை முதலே மழை பற்றி மணிக்கொருமுறை பதிவிட்டு வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மிக நீண்ட மழை நாளாக அமையும் என்று பதிவிட்டுள்ளார். பிரதீப் ஜான். இது வட தமிழகம் ஸ்பெஷல் என்றும் கூறியுள்ளார்.
|
அன்புமணி ராமதாஸ் பாராட்டு
வெதர்மேன் கணிப்புகளை படித்து வரும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, வெதர்மேன் பிரதீப் ஜானை பாராட்டியுள்ளார். மழை நேர கணிப்புகள் துல்லியமாக இருக்கிறது. இது மிக சிறப்பான சேவை என்று பாராட்டியுள்ளார் அன்புமணி.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications