மெட்ரோ வாட்டரும் இல்லை.. ஜிஎஸ்டியால் கேன் நீரின் விலையும் கிடு கிடு.. அதோகதியில் சென்னைவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி காரணமாக சென்னையில் குடிநீர் கேன்களின் விலை 5 முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் கிடைக்காமல் விலை கொடுத்து கேன் குடிநீர் வாங்கிக் குடிக்கும் நகரவாசிகளின் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்துள்ளது.

நாடு முழுவதற்கும் ஒரே வரியான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர் என அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

GST: Hike in water can price shock chennaities

எல்லா பொருளுக்கும் வரி எகிறியுள்ளது போன்றே குடிநீர் கேன்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குடிநீர் கேன்களின் விலையில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே மிகக் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் இதுவரை கேன் குடிநீரை வாங்காத ஏழை மக்கள் கூட தற்போது குடிநீரை கேன்களில் வாங்கி குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டியால் குடிநீர் கேன்களின் விலை 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது சென்னைவாசிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Water can price hike from 5 to 10 rupees due to 18% GST.
Please Wait while comments are loading...