அமலுக்கு வந்தது 5% ஜிஎஸ்டி.. இன்று முதல் ரெஸ்டாரண்ட்டுகளில் உணவு விலை குறையும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்களால் ரெஸ்டாரண்டுகளில் இன்று முதல் உணவு பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடந்த வாரம் கவுகாத்தியில் நடைபெற்ற 23வது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான 28 சதவீத வரி விகிதம் குறைக்கப்பட்டது.

தற்போது சிகரெட் உள்ளிட்ட 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல்

இன்று முதல் அமல்

இதில் நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் மற்றும் பணிக்குச் செல்லும் இளைஞர்களின் பெரும் கோரிக்கையாக இருந்த ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பும் அமலுக்கு வந்துள்ளது. ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஹோட்டல் துறையிலுள்ளவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

அனைத்து ரெஸ்டாரண்டுகளுக்கும் ஒரே வரி

அனைத்து ரெஸ்டாரண்டுகளுக்கும் ஒரே வரி

புதிய நடைமுறைப்படி, ஏசி, ஏசியற்ற ரெஸ்டாரண்டுகள் என்று தரம்பிரித்து இனி ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும் இனிமேல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும். ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு பழைய வரி விதிப்பே பொருந்தும். அதேபோல ஒரு நாளைக்கு 7500க்கும் மேல் தங்கும் வாடகை வாங்கும் ஹோட்டல்களுக்கும் பழைய வரி விதிப்புதான் பொருந்தும். கேட்டரிங் செய்யப்படும் உணவுக்கும் பழைய வரி விதிப்பு பொருந்தும்.

கூட உட்கார்ந்து சாப்பிட்ட அரசு

கூட உட்கார்ந்து சாப்பிட்ட அரசு

ரெஸ்டாரண்டுகளில் முன்பு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் அங்கு உணவு பொருள் விலை அதிகரித்தது. உதாரணத்திற்கு ரூ.900க்கு பில் வந்தால் அதில் சுமார் 150 ரூபாய் ஜிஎஸ்டி வரிக்கே சென்றது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கூட இதை சாடியிருந்தார். ஹோட்டலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லை பார்த்தால் என் பக்கத்தில் மத்திய அரசும், மாநில அரசும் உட்கார்ந்து சாப்பிட்டதை போல உணருகிறேன். இருவருக்கும் சேர்த்து பில் கட்ட வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.

ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்பு

ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்பு

இப்போது வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதால் ரெஸ்டாரண்டுகளில் உணவு விலை குறையும். எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், ரெஸ்டாரண்ட் தொழிலுக்கு இனிமேல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி கிடையாது என்று ஜெட்லி தெரிிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All restaurants A/C or Non A/C except those in hotels with room tarrif of over ₹7500 will pay only 5% GST, from Today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற