அறுவறுப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கமல் எப்படி அரசை விமர்சிக்கலாம்? ஹெச் ராஜா கொந்தளிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: அறுவறுக்கதக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கமல் எப்படி அரசை விமர்சிக்கலாம் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

சிறையில் சிறப்பு வசதிகளை அனுபவிக்க சசிகலா, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

H Raja has said that the money has gone up to Bengaluru jail

இந்நிலையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வரை பாய்ந்துள்ளது என்றார்.

அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டதாகவும் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் அரசை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச் ராஜா அறுவறுக்கத்தக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டுள்ளதாக கூறினார்.

அறுவறுப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர் எதற்கு அரசை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார். திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில் தான் தமிழகத்தின் விடியல் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து அதிமுக, திமுகவை மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குடும்ப ஆட்சி, பண ஆட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP national secretary H Raja has said that the money has gone up to Agrahar jail. He said about the complaint on Sasikala gave bribe to Karnataka prison DGP. He asked how kamala can criticize the govt.
Please Wait while comments are loading...