தமிழக சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் 52 வாக்குகளை மட்டுமே பெற்ற எச்.ராஜா படுதோல்வி
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட மணி வெற்றியடைந்தரா்.
சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கல்வி இயக்குநர் மணி வெற்றி பெற்றார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணியும் போட்டியிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி
வாக்குபதிவு நடைபெற தொடங்கிய போதே, வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை நடத்த வேண்டாம் என்று டெல்லியில் இருந்து வந்ததாக கூறி ஒரு கடிதத்தை தேர்தல் பொறுப்பாளரிடம் ராஜா ஆதரவாளர்கள் அளித்தனர். ஆனால் அதுபோன்ற கடிதம் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்துவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த...
இதையடுத்து வாக்குப்பதிவு 2 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போதும் ராஜா தரப்பினர் மற்றொரு கடிதத்தை கொடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு கூறினர். இதனால் தேர்தல் பொறுப்பாளர் சங்கரன் பாதியிலேயே சென்றுவிட்டார்.

232 வாக்குகள் பெற்றார் மணி
இதைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் பள்ளிக் கல்வியின் முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றுவிட்டார். எதிர்த்து போட்டியிட்ட ராஜாவோ தோல்வியை தழுவினார். மொத்தம் 286 பேர் வாக்களித்தனர். அதில் 232 வாக்குகளை பெற்று மணி வெற்றி பெற்ற நிலையில், வெறும் 52 வாக்குகளை எச்.ராஜா பெற்று தோல்வியடைந்தார். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

எச்.ராஜா தோல்வி
பள்ளி கல்விக்கான தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடக் கூடாது என்று அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஒரு சில அழுத்தம் காரணமாக பாஜகவின் எச்.ராஜா போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.
இதனிடையே சாரண, சாரணியர் இயக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிக்கு, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். மணி அளித்த பேட்டியில், சாரணர் இயக்கத்தை மாநிலம் முழுவதும் அறியச் செய்தமைக்காக ராஜாவுக்கு நன்றி என தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications