திருமாவளவன் நாக்கை அடக்கிப பேச வேண்டுமாம்.. சொல்கிறார் எச். ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாவை அடக்கி பேச வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் வளர்ப்பது அதனை கொன்று தின்பதற்குதான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறி உள்ளார். எனவே அவரை உடனடியாக தமிழக முதல்வர் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

H.Raja Warning on Thol.Thirumavalavan

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும். சீமான், திருமாவளவன் ஆகியோர் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். பிரதமர் மோடியின் அரசு 3 ஆண்டுகளாக தவறிய இந்திய பொருளாதாரத்தை சரியான பாதையில் நடத்தி செல்கிறது.

நேரடி வரிவிதிப்பில் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் 90 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர். தற்போது மறைமுக வரியை ஏமாற்றுபவர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP national secretary H. Raja has Condemne on VCK leader Thol.Thirumavalavan Controversy speech about prime minister Modi
Please Wait while comments are loading...