மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்பேன்: கருணாநிதி
சென்னை: மதிமுக, பாமக உடன் கூட்டணி ஏற்பட்டால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். பாமக இல்லத்திருமண விழாவை முன்வைத்து தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி விதையை தூவியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பு விழா மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டார்.

அதே போல் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது ம.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தங்கள் விருப்பம் நிறைவேறும் என்று சூசகமாக விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி, நீண்ட கால நண்பர் என்ற முறையில் ஸ்டாலினை வைகோ சந்தித்தார் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்:
செய்தியாளர்: தி.மு.கழகப் பொருளாளர் ஸ்டாலின் நேற்றைய தினம் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்து பேசியிருக்கிறாரே; இந்தச் சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருக்குமா?
பதில்: தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
செய்தியாளர்: மேலும் பல கட்சித் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்திற்கு வருகிறார்கள். நீங்களும் அங்கு செல்கிறீர்கள். இதைத் தொடர்ந்து புதிய கூட்டணி உருவானால் நீங்கள் வரவேற்பீர்களா?
பதில்: புதிய அணி உருவானால் அந்த அணி பற்றி தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்தால் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்பேன்.
செய்தியாளர்: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார். உங்களைச் சந்திக்க வந்தால் சந்திப்பீர்களா?
பதில்: நாங்கள் நீண்டகால நண்பர்கள்; பகைவர்கள் அல்ல, சந்திப்போம்.

செய்தியாளர்: இந்த திருமண விழாவை புதிய கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்கிறீர்களா, ஏனென்றால் டாக்டர் ராமதாஸ் பேசும்போது உங்களுக்கும் அவருக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் சிறந்த நட்பைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறாரே, அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: மகிழ்ச்சி அடைகிறேன்.
செய்தியாளர்: தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால், இது மிகவும் முன்கூட்டியே நடைபெறுகின்ற ஒன்றா?
பதில்: நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி.
செய்தியாளர்: உங்களைப் பொறுத்தவரை என்ன கருதுகிறீர்கள்?
பதில்: எனக்கு மகிழ்ச்சிதான்.
திருமண விழாவில்
இதனைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இல்லத்திருமண விழாவிற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார் கருணாநிதி. அப்போது டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர். இதனைத் தொடர்ந்து பேசிய கருணாநிதி, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியடைவேன் என்றும், பாமகவை கூட்டணிக்கு வரவேற்பதாகவும் கூறினார்.

விமான நிலையத்தில்
இந்த நிலையில் திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்தது போலவே, இன்று காலை வைகோவும், ஸ்டாலினும் பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது நேற்றைய திடீர் சந்திப்பு குறித்து இருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
அரசியல் நாகரீகம்
அப்போது, அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டு தான் ஸ்டாலின் உடனான சந்திப்பு. தேர்தல் கூட்டணி குறித்து தற்போதைய சூழலில் ஒன்றும் சொல்ல முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தேர்தல் நேரத்தில் தெரியும்
மதிமுக, பாமக உடனான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரியும் என திமுக பொருளாளர் ஸ்டாலினும் தெரிவித்தார். ஒரே விமானத்தில் பயணம் இதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே விமானத்தில் மதுரைக்குப் புறப்பட்டு சென்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications