For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவைக்கு வந்தது "சந்தோஷ சாலை"... தமிழகத்திலேயே முதல் முறையாக அறிமுகம்!

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சந்தோஷ சாலை என்ற திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ரத்தினசாமிபுரம் திவான் பகதூர் சாலையும், திரவேங்கடசாமி சாலையின் மேற்குப்ப குதியும் சந்திக்கும் இடம் சந்தோஷ சாலையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

காலை 3மணி நேரத்திற்கு

காலை 3மணி நேரத்திற்கு

இந்த சாலையில் காலை வாரா வாரம் ஒரு நாள், காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படும்.

விளையாடலாம் ஜாலியாக

விளையாடலாம் ஜாலியாக

போக்குவரத்து நிறுத்தப்படும் இச்சாலையில், சைக்கிள் ஓட்டுதல், யோகா நடனம் மற்றும் கால்பந்து, கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுக்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாலையில் நடக்கும்.

ஞாயிறு தோறும்

ஞாயிறு தோறும்

இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மேற்கண்ட நிகழ்வுகள் நடக்கும். இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

மாசில்லாத பகுதி

மாசில்லாத பகுதி

போக்குவரத்து அறவே இல்லாத சாலையாக மாற்றப்பட்டு மாசு இல்லாத பகுதியாக மூன்று மணி நேரம் மட்டும் செயல்படும்.

52 வாரங்களுக்கு

52 வாரங்களுக்கு

சென்ற வாரம் முதல் இந்த "சந்தோஷ சாலை" ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 52 வாரங்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு விருந்தினர் ஆர்யா

சிறப்பு விருந்தினர் ஆர்யா

கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையாளர்களால் இந்த முயற்சிக்கான முதல்கட்ட பணிகள் சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.

English summary
Happy road project has been introduced in Coimbatore last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X