தமிழில் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன ஹர்பஜன்சிங்- வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் புத்தாண்டு வாழ்த்துகள் கூறும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவர் பொங்கல் வாழ்த்துகள் தொடங்கி அனைத்தையும் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

Harbhajan Singh expresses his Tamil New year wishes in Tamil

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அந்த புத்தாண்டு நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார்.

அதில் அவர் வணக்கம் சென்னை, தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறுகிறார்.மேலும் தமிழா இது உன்னுடைய புத்தாண்டு

சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்

புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்

உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதை பபார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் பூரிப்படைந்துள்ளனர். இதற்கு டுவிட்டரில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Harbhajan Singh wishes for Tamil New year in Tamil. His tamil speaking video uploaded in his twitter goes viral.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற