சிறுமி ஹாசினியையும், தாய் சரளாவையும் நான் கொல்லவில்லை- தஷ்வந்த் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்!- வீடியோ

  சென்னை: சிறுமியையும், தனது தாயையும் தான் கொலை செய்யவில்லை என்றும், செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விவரமும் அளிக்க தயார் என்றும் தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.

  சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹாசினியையும், தனது தாயையும் தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

  கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

  மும்பையில் கைது

  மும்பையில் கைது

  குண்டர் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயை கொன்று விட்டு தப்பினார். மும்பையில் கைது செய்யப்பட்டான். விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்த், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காவிட்டால் தந்தையை கொல்ல முடிவெடுத்ததாகவும் கூறினார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

  தஷ்வந்த் ஆஜர்

  தஷ்வந்த் ஆஜர்

  இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தஷ்வந்த் கடந்த 13ஆம் தேதியன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  நீதிமன்றத்தில் அடி

  நீதிமன்றத்தில் அடி

  அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தஷ்வந்த் மீது சராமரியாக தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும் வீசினர். சிறுமியை கொன்று விட்டு அம்மாவையும் கொன்றவனை உயிரோடு விடக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக தஷ்வந்த் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

  நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

  நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

  இந்நிலையில் தஷ்வந்தை விசாரணைக்காக அழைத்து வந்த மாங்காடு போலீஸார், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 10 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 29ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்த நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

  வாக்குவாதம்

  வாக்குவாதம்

  இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட தஷ்வந்தை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். அப்போது தனது தாய் கொலை தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேச முயன்றார். அந்தச் சமயத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவரைத் தடுத்தனர். இதனால் போலீஸாரிடம் தஷ்வந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் வேகவேகமாக அங்கிருந்து வேன் மூலம் தஷ்வந்தை அழைத்துச் சென்றனர்.

  நான் கொல்லவில்லை

  நான் கொல்லவில்லை

  இதனிடையே இன்று தஷ்வந்த் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹாசினியையும், தனது தாயையும் தான் கொல்லவில்லை என்று கூறினார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த்,செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விவரமும் அளிக்க தயார் என்று கூறினார். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், தன் மீதான குற்றச்சாட்டை திடீரென மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Dhasvanth appear before Chengalpattu court who allegedly killed his mother and rape and killed minor girl Hassini.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற