For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் 13 பேர் கொண்ட நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் அமைப்பு - மாவட்ட சுகாதாரத் துறை

Google Oneindia Tamil News

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கன மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு டாக்டர்கள் குழு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் புதுச்சேரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

Heavy flood in Cuddalore; special medical camps formed

இதனையொட்டி புதுச்சேரி, கடலூரில் பலத்த மழை பெய்தது . இதனால் வெள்ளம் கெடிலம் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது . மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் , பண்ருட்டி, புனவகிரி குறிஞ்சிப்படாடி, வடலூர், காட்டு மன்னார் கோவில் பகுதிகளில் மழை கனமாக இருந்தது.

இதனால் இப்பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. மரங்கள் பல இடங்களில் வேரோடு சாய்ந்தது, மின் கம்பங்கள் முறிந்தன வீதிகளில் மழை நீர் தேக்கத்தினால் வாகன போக்குவரத்து தடைபட்டது .

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக 13 பேர் கொண்ட நடமாடும் டாக்டர்கள் குழு, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து வருகின்றனர்.

நோய் தடுப்பு உபகரணங்களும், மருந்துகளும் போதிய அளவில் இருப்பதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

English summary
special medical camps proceeded in Cuddalore district for heavy rain flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X