நார்வே வானிலை மையம் வார்னிங் கொடுத்தாச்சுன்னு ஒன்இந்தியாதமிழ் சொல்லிச்சே.. சென்னையில் பலத்த மழை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

சென்னை: நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரித்தது போலவே சென்னையில் 12 மணிக்குப் பிறகு மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வெளுத்து வாங்கி வருகிறது.

இன்று காலை முதல் லேசான சாரல் தூறலுடன் இருந்தது சென்னை க்ளைமேட். வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வெயிலும் தலைக்காட்டியது.

செய்தி வெளியிட்ட ஒன்இந்தியா

செய்தி வெளியிட்ட ஒன்இந்தியா

ஆனால் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து நமது ஒன் இந்தியாவும் காலையில் செய்தி வெளியிட்டிருந்தது.

சென்னையில் பலத்த மழை

சென்னையில் பலத்த மழை

இந்நிலையில் இன்று பிற்பகலில் சென்னை சேப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

பலபகுதிகளில் கனமழை

பலபகுதிகளில் கனமழை

அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கள், அசோக் நகர், கோயம்பேடு, சின்மயா நகர், செங்குன்றம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

புறநகரிலும் பலத்த மழை

புறநகரிலும் பலத்த மழை

இதேபோல் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மீண்டும் மெய்யான வார்னிங்

மீண்டும் மெய்யான வார்னிங்

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை குறித்து நார்வே நாட்டு வானிலை மையம் கொடுத்த வார்னிங் பலித்துள்ளது. இந்நிலையில் இன்றும் அது மீண்டும் நம்பதகுந்த வகையில் மெய்யாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Norway government Meteorological site yr.no said heavy rain will be there in Chennai today afternoon. As norway said Chennai rains heavily. Yesterday also norway meteorological center warned for heavy rain it happened.
Please Wait while comments are loading...