தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்
Recommended Video
சென்னை: விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
சில மாவட்டங்களில். ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

கனமழை பெய்யும்
இன்று அரியலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானினிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

இன்று முதல் 4 நாள்
இதனிடையே அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

கடலுக்கு போகாதீங்க
அடுத்த 24 மணிநேரத்துக்கு லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வத்திராயிருப்பில் 15செ.மீ
நேற்று காலை நிலவரப்படி அதிபட்சமாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 15 செ.மீ. மழையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. நீலகிரி, குந்தா அணைக்கட்டுப் பகுதியில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. கொடைக்கானல், தென்காசி, அதிரம்பட்டினம்(தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. ராஜபாளையம், சாத்தான்குளம், திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. இதுதவிர, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்து இருந்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications