குன்னூரில் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை - போக்குவரத்து நிறுத்தம்! : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கனமழையால் ஊட்டி போக்குவரத்து நிறுத்தம்

  குன்னூர்: குன்னூர் மலைப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஊட்டி, குன்னூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஊட்டியின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

  Heavy rain in Ooty and no transport

  ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

  கனமழையின் கரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாகவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. அதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As Ooty and conoor got severe rain, road transport stopped.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற