தேனியில் சுழன்றடித்த சூறாவளி... பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன. கம்பம், காமயகவுண்டன் பட்டி, உத்தமபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.

கோடை மழை பல மாவட்டங்களில் கொட்டி வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்தே சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.

Heavy rain strong winds damage banana plantations in Theni

பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவு முழுவதும் பல நகரங்களில் மின் தடை ஏற்பட்டது.பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Theni district has been witnessing heatwave conditions last week. Hot weather conditions, rain gods did give some rain and thunderstorm strong winds damage banana plantations.
Please Wait while comments are loading...