மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஹேவிளம்பி வருடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று அர்த்தமாம். இந்த ஆண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை நடைபெற்றது துர்முகி வருடமாகும் 'துர்முகி' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம். பணப்பஞ்சத்திலும் மக்கள் தவித்தனர். இன்று முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது.

Hevilambi Samvatsara Meaning

சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம். இந்த ஆண்டு செல்வ செழிப்போடு இருக்கும் தெரிவித்துள்ளனர். நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஹேவிளம்பி

ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.

அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.

30 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும் ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது. நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.

வருடத்தின் பெயர்கள் அந்த ஆண்டின் பலனைச் சொல்லும் என்பதன்படி சென்ற வருடம் யாரெல்லாம் துன்பமான, சோகமான, பார்க்கப் பிடிக்காத முகத்துடன் இருந்தீர்களோ, யாருக்கெல்லாம் துயரமான, மனதைப் பாதித்த சம்பவங்கள் நடந்ததோ, அவர்கள் அனைவரும் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் துயரங்கள் நீங்கி உங்கள் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம் சொல்லுவீர்கள். எனவே அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் வருடம் இது.

இந்த ஆண்டின் இன்னொரு சிறப்பு பலனாக, பிறக்கும் புது வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடக்க இருக்கின்றன. விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது.

விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர். குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. கிழமையும் வெள்ளிக்கிழமை ஆகையால் இந்த மாதிரி குரு சனி சுக்ரன் சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is the meaning of Hevilambi Tamil New year Meaning.
Please Wait while comments are loading...