பணமோசடி வழக்கில் நத்தம் விஸ்வநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: பணமோடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமின் வழங்கியுள்ளது.

லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தில் ரூ.2,97,90,700-யை திரும்ப தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலர் ஏ.சபாபதி திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

High Court bench of Madurai granted bail for Natham vishwanathan

இவரது புகாரின் பேரில் போலீஸார் கொலை மிரட்டல், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மதுரை ஹைகோர்ட்டில் சபாபதி வழக்கு தொடர்ந்தார். அநத் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் அந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இந்நிலையில் முன்ஜாமின் கேட்டு நத்தம் விஸ்வநாதனும் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நத்தம் விஸ்வநாதனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the forgerry case of the former Minister Natham Viswanathan High Court bench of Madurai granted bail.
Please Wait while comments are loading...