தனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது
திருவள்ளூரில் தனது கார் மீது வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் காளிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனது கார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் காளிகுமார். இவர் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். காளிகுமார் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசினர் என்றும் அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கார் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

காளிகுமார் தனது காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கி, தன்னை கொலை செய்ய முயன்றனர் என்று போலீஸாரிடம் அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மீது யாரும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், காளிகுமார் தனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளர் காளிகுமார் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நாடகம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கூறுகையில், விளம்பரத்துக்காக காளிகுமார் தனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடியிருக்கிறார். இதில் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications