For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவிலிருந்து இந்துக்கள் எல்லாரும் வெளியேவாங்க.. எச்.ராஜா சர்ச்சையோ சர்ச்சை!

திமுக கட்சியில் உள்ள ஹிந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்துக்கள் திமுகவை விட்டு வெளியே வாருங்கள் வாருங்கள் - எச். ராஜா- வீடியோ

    மதுரை: திமுக கட்சியில் உள்ள ஹிந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார்.

    இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நெல்லை தாமிரபரணியில் புஷ்கரணி விழா நாளை தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அவர் மதுரை கோவிலுக்கு சென்று இருந்தார்.

    Hindus should leave from DMK party says H Raja

    அவர் தனது பேட்டியில், அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக அதிமுக., அரசு முன்வரவேண்டும்.

    அரசு இதில் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த இந்து பண்டிகையாக இருந்தாலும் அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. திமுக இந்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும், தலைமை தாங்குவது வழக்கமாகி விட்டது.

    இந்த நிலையில்தான் தற்போது திமுக., கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக., என்று பலரும் ஆட்சியரிடம் சென்று தாமிரபரணி புஷ்கரம் நடத்தக் கூடாது என்று மனு கொடுத்தார்கள். இது இந்துக்களுக்கு நடவடிக்கை.

    இதனால் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதனால் திமுக கட்சியில் உள்ள ஹிந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Hindus should leave from DMK party says H Raja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X