திமுகவுக்குத் தாவிய சேகர்பாபு.. வெற்றிவேலை வைத்து ஆட்டம் காட்டிய ஜெ... ஆர்.கே.நகர் பிளாஷ்பேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியானது வட சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்றாகும். இங்கு கடந்த சட்டசபைத் தேர்தல் நிலவரம் குறித்து ஒரு ஆய்வு...

கடந்த 2011ல் நடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதின.

அதிமுக சார்பில் பி. வெற்றிவேல் போட்டியிட்டார். திமுக சார்பில் பி.கே.சேகர்பாபு போட்டியிட்டார். இவர் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுகவை விட்டு விலகி திமுகவுக்குப் போனவர். தீவிர அதிமுககாரராக இருந்த சேகர்பாபு கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் திமுகவுக்குப் போய் விட்டர். அதற்குப் பரிசளிக்கும் வகையில் ஆர்.கே.நகர் சீட்டை சேகர்பாபுவுக்கே திமுக கொடுத்தது.

How Vetrivel decimated friend turned foe P K Sekhar Babu in R K Nagar in 2011?

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக உள்பட மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அதிமுக, திமுகவைத் தவிர மற்ற 29 பேர் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.

அதிமுக வேட்பாளர் பி.. வெற்றிவேலுக்கு 83,777 வாக்குகள் கிடைத்தன. திமுகவின் சேகர்பாபுவுக்கு 52,522 வாக்குகள் கிடைத்தன. 31,255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவேல் வெற்றி பெற்றார்.

ஒரு காலத்தில் இங்கு மதுசூதனன் இங்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர் அவரது உறவினரான சேகர்பாபு அதிமுகவின் முக்கியப் புள்ளியாக இங்கு திகழ்ந்து வந்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் கிளம்பியதால் கட்சியை விட்டு தூக்கப்பட்டார். திமுகவுக்குப் போனார். ஆனால் வெற்றிவேலை வைத்து இங்கு சேகர்பாபுவை மடக்கி விட்டார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+