சேலம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்! பெற்ற பிள்ளைகள் கண்முன்னே வெறிச்செயல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்!-வீடியோ

  சேலம்: சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக பிள்ளைகள் முன்னிலையிலேயே மனைவியின் தலையில் கணவன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

  Husband kills wife near Salem and arrest

  இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அடிக்கடி பரமேஸ்வரியின் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
  இந்த நிலையில் நேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவி பரமேஸ்வரி தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்கூடாக பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.

  இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Due to the dispute between husband and wife near Salem, wife has been murdered. In front of the children, the husband and his wife lifted the stone on his head. He died on the spot. The police arrested the husband and arrested the murder case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற