நான் 16 வயது இளைஞன் அல்ல.. 61 வயது இளைஞன்.. ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி!
தான் 16 வயது இளைஞன் அல்ல, 61 வயது இளைஞன் என்று மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தான் 16 வயது இளைஞன் அல்ல, 61 வயது இளைஞன் என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழா சனிக்கிழமை ஒய்எம்சி மைதானத்தில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சாடினார்.
இந்த கருத்துக்கு பதிலளித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார். வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்றும் கிண்டல் செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வயதானவர்கள் என்ற தமது கருத்து புறந்தள்ளப்பட்ட கட்சிகள் என்ற பொருளிலானது என்று தெரிவித்தார்.
தமிழக அரசை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதனை தமிழக முதல்வர் தான் சொல்லவேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications