நான் நிர்மலா தேவி கிடையாது.. ஃபேக் போட்டோவை பார்த்து குமுறும் பாஜக பெண் பிரமுகர்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் நிர்மலா தேவி கிடையாது.. குமுறும் பாஜக பெண் பிரமுகர்- வீடியோ

  சென்னை: சமூக வலைத்தளத்தில், பாஜகவை சேர்ந்த ஜெஸ்ஸி முரளிதரனை தவறாக சித்தரித்து, பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என பரப்பி வருவதாக பாஜக ஊடக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

  பாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

  இதுகுறித்து தமிழக ஊடக பிரிவு, தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: இவர் பெயர் ஜெஸ்ஸி முரளிதரன். தமிழக பாஜக வைச் சேர்ந்தவர். இவரது புகைப்படத்தை, தவறாக சித்தரித்து, இவர்தான் பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்!

  I am not Nirmala Devi, claims BJP woman leader

  அனைவரும் பகிர்ந்து இந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க உதவுங்கள். அராஜக தீய சக்திகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இனி யாருக்கும் சந்தேகம் இருக்காது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் இலாக்காகளில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  உடனடி நடவடிக்கை இல்லை எனில் தீவிர போராட்டத்திற்கு தயாராவோம்! இவ்வாறு, ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே, ஜெஸ்ஸி முரளிதரன் பேசிய வீடியோவையும், பாஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

  நான் நிர்மலா தேவி கிடையாது. ஜெஸ்சி முரளிதரன். நான் பாஜக கட்சியில் 5 வருடங்களாக உள்ளேன். திமுகவில் உள்ளவர்களுக்கு கூட என்னை தெரியும். எதற்காக இப்படி செய்கிறீர்கள், உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்வீர்களா, சோஷியல் மீடியாவில் எடுத்து போட்டவன் ஆம்பிளையா? அவர்கள் வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி போட்டோவை எடுத்து போடலாமே. எனது போட்டோவை ஏன் போடுகிறாய்? எனக்கு நியாயம் கிடைக்கனும். இதற்காக எந்த எல்லைக்கும் போவேன்.

  எங்களுக்கு நீங்கள்தான் விளம்பர பலகை, நீங்கள் செய்து கொண்டே இருந்தாலும், நாங்கள் அச்சப்பட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP media cell claim that the social networking site is misleading the BJP's Jesse Muralitharan with sexual professor Nirmala Devi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற